Saiva Tamil Kultur Organisation, Denmark
சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை, டென்மார்க்

டென்மார்க் சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஆன்மீக இணையம்

“பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி”

கணபதி

கற்பகக் கணபதி கவிமகள் ஒளவையைச்
சொர்க்கமாம் புரிவரை சுமந்துமே சென்றவன்
அற்புதமானவன் அடியவர்க் கெளியவன்
அறுகது புல்தனை அர்ச்சனை கேட்டவன்
வெற்பிலே பாரதம் விரைந்துமே எழுதிய
வேழமுகத்தவன் வேதமே யானவன்
சுற்றியே உமையையும் சிவனையும் வந்துமே
சுவைமிகு மாங்கனி சுலபமாய்ப் பெற்றவன்!

குறத்தியாம் வள்ளியைக் குமரனும் அடைந்திட
களிற்றுரு வாகியே களத்திலே நின்றவன்
பறந்துமே காக்கையாய்ப் புரட்டியே கமண்டலம்
பிறந்திடக் காவிரி பேரருள் புரிந்தவன்
துறந்தவன் அகத்தியன் துயர்தனைப் போக்கியே
தூயவள் பொன்னியைத் தொழுதிட வைத்தவன்
மறந்திடா திவனையே வணங்கிடக் காரியம்
மகிழ்ச்சியாய் முடிந்துமே மனங்களித் திடுவிரே!

துர்க்கை
புகழ்பெற்ற தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் ‘வெல்லமுடியாதவள்’ என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவள். அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள்.. (மேலும் வாசிக்க)
இலக்குமி
இலக்குமி அல்லது திருமகள் என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்க ப்படுகி றார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம …….    (மேலும்பார்க்க)
சரஸ்வதி
இந்துக்கள் சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும் எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத்..  .(மேலும் பார்க்க)