Lakshmi

இலக்குமி
இலக்குமி அல்லது திருமகள் என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்க ப்படுகி றார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.

ஒருவருடைய வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்வது என்பது சுலபமான காரியம் அல்ல. ஏனெனில் லட்சுமி தேவி என்பது பணம், சொத்துக்கள், ரத்தினங்கள்
நகைகள் போன்றவற்றை

குறிப்பதாகும். இவைகள் எல்லோரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கி விடுவது இல்லை. இன்று உங்களுடைய பொருள், நாளை வேறு ஒருவர் உடையதாக மாறிவிடுகிறது. இன்று உங்கள் கையில் இருக்கும் பணம், நாளை கட்டாயம் வேறு ஒருவர் கையில் தான் இருக்கும். ஆக பணம் என்பது நிலையானது அல்ல. அதே போல் தான் லட்சுமி தேவி நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பதில்லை.

லக்ஷ்மி தேவிக்கு பிடித்த சில விஷயங்களை நாம் செய்யும் பொழுது, நம்முடனேயே நிரந்தரமாக தங்கி விடுவதும் உண்டு. இதற்கு பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். நல்ல  கர்மாக்கள்  அதிகமாக இருக்கும் எல்லோரிடமும் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்கிறாள் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் இன்று கெட்டதை ஒரு பணக்காரன் செய்து கொண்டிருந்தாலும், அவனுக்கு மென்மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

மகா விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அள்ளித் தருவதால் ‘வரலட்சுமி’ என அழைக்கப்படுகிறார்.
செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாளாகும். மகாலட்சுமி தேவியை வழிபட்டு வேண்டிய வரம் பெறும் சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும்.
இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும்இ திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைபிடிக்கலாம். வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை இருக்காது.
திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும். சில குடும்பத்தில் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கம் கிடையாது. அவர்கள் பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று பூஜை செய்யலாம்.
விரதத்துக்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பசு மாட்டின் கோமியம் தெளித்து மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில், பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போட வேண்டும்.
மகாலட்சுயின் படம் வைத்து கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பி தட்டு வைத்து அதன் மீது கலசம் வைத்து பட்டுப்பாவாடை, நகைகள் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து, பூச் சூட்டி, கும்பத்தை அலங்காரம் செய்து கட்டி, கோலமிட்டு மகாலட்சுமிக்கு வரவேற்புக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து கலசத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும்.
மறுநாள் வெள்ளிக்கிழமை நோன்பு நாளில் நோன்பு சரடை கும்பத்தோடு வைத்து பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி கும்பத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம், அன்னம் நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற உணவுப் பொருட்கள் படைக்க வேண்டும்.
வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமியிடம் வேண்டிய வரத்தை கேட்டு வரலட்சுமியின் ஸ்தோத்திரங்களை கூறி, தூப தீப ஆராதனை களைச் செய்து வர லட்சுமி தாயை வழிபாடு செய்ய வேண்டும்.பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும்.
 
Ingen tilgængelig billedbeskrivelse.
 
 
 
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *