சரஸ்வதி
இந்துக்கள் சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும் எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளா கவும்இ சரஸ்வதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வேண்டிப் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை ஆகும். இச் சரஸ்வதிப் பூஜையானது நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர நாளில் தொடங்க வேண்டும் என்பது நியதியாகும்.
நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.சரஸ்வதி தேவி நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படுகின்றாள். வாணி ஏந்தியிருக்கும் வீணைக்கு கச்சபி என்று பெயர்.