Vinayagar Leave a Comment / Guds / By admin கணபதிகற்பகக் கணபதி கவிமகள் ஒளவையைச்சொர்க்கமாம் புரிவரை சுமந்துமே சென்றவன்அற்புதமானவன் அடியவர்க் கெளியவன்அறுகது புல்தனை அர்ச்சனை கேட்டவன்வெற்பிலே பாரதம் விரைந்துமே எழுதியவேழமுகத்தவன் வேதமே யானவன்சுற்றியே உமையையும் சிவனையும் வந்துமேசுவைமிகு மாங்கனி சுலபமாய்ப் பெற்றவன் !குறத்தியாம் வள்ளியைக் குமரனும் அடைந்திடகளிற்றுரு வாகியே களத்திலே நின்றவன்பறந்துமே காக்கையாய்ப் புரட்டியே கமண்டலம்பிறந்திடக் காவிரி பேரருள் புரிந்தவன்துறந்தவன் அகத்தியன் துயர்தனைப் போக்கியேதூயவள் பொன்னியைத் தொழுதிட வைத்தவன்மறந்திடா திவனையே வணங்கிடக் காரியம்மகிழ்ச்சியாய் முடிந்துமே மனங்களித் திடுவிரே!!