(பாலர் பிரிவுக்கு கேள்வி பதில் இல்லை)
கீழ்ப்பிரிவு:
1. சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் யார்?
சிவபெருமான்
2. சிவபெருமானின் சக்தி (மனைவி) யார்?
உமாதேவியார்
3. யானைமுகம் கொண்ட கடவுள் யார்?
பிள்ளையார்
4. மயில் யாருடைய வாகனம்?
முருகப்பெருமானின் வாகனம்
5. கல்விக்குரிய தெய்வம் யார்?
சரஸ்வதி
6. செல்வத்தைத் தருபவர் யார்?
இலட்சுமி
7. சரஸ்வதிக்குரிய பூஜைநாள் எது?
சரஸ்வதி பூஜை
8. வீரத்தைத் தரும் தெய்வம் யார்?
துர்க்கை
9. டென்மார்க்கில் பிள்ளையார் ஆலயம் எங்கே உள்ளது?
கேணிங் நகரில்
10. விநாயகரின் மறுபெயர் இரண்டு?
கணபதி, விக்னேஸ்வரன்
மத்திய பிரிவு:
1. முருகன் கையிலுள்ள ஆயுதம் எது?
வேல்
2. தனது கண்ணை இறைவனுக்குக் கொடுத்த நாயனார் யார்?
கண்ணப்ப நாயனார்
3. சமய குரவர்கள் நால்வரும் யாவர்?
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
4. கோவிலில் எவ்விடத்தில் வீழ்ந்து கும்பிட வேண்டும்?
மூலஸ்தானத்துக்கு நேராக கொடித்தம்பத்துக்கு அப்பால் வீழ்ந்து வணங்க வேண்டும்.
5. திருநாவுக்கரசு நாயனாரின் தமக்கையார் யார்?
திலகவதியார்
6. மாம்பழத்துக்கு சண்டை போட்டுக்கொண்டு முருகப்பெருமான் சென்ற இடம் எது?
பழனிமலை
7. மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் யாவை?
திருவாசகம், திருக்கோவையார்
8. உமாதேவியாரிடம் ஞானப்பால் உண்டவர் யார்?
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
9. கோவில் வாசலில் இருபுறமும் காவல்தெய்வங்கள் யார்?
துவாரபாலகர்கள்
10. மார்க்கண்டேயரின் தந்தையார் யார்?
மிருகண்டு முனிவர்
11. இலங்கையிலுள் இரண்டு சிவனுடைய திருத்தலங்கள்?
திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம்
12. சிவனும் திருமாலும் அடிமுடி தேடிய திருத்தலம் எது?
‘திருவண்ணாமலை’
மேற்பிரிவு:
1. பெரியபுராணம் பாடிய நாயனார் யார்?
சேக்கிழார்
2. சரஸ்வதியின் கையிலுள்ள வீணையின் பெயர் என்ன?
‘விபஞ்சி’
3. திருப்பல்லாண்டு பாடியவர் யார்?
சேந்தனார்
4. பெண் நாயன்மார்கள் யாவர் ?
மங்கையற்கரசியார், காரைக்காலம்மையார், இசைஞானியார்
5. திருமூலர் எழுதிய பாசுரம் எது?
திருமந்திரம்
6. சிவராத்திரியன்று இரவு எத்தனை காலப் பூசைகள் இடம்பெறும்?
நான்கு காலப்பூசைகள்
7. பத்துத் தேவாரப் பாடல் சேர்ந்ததை எப்படி அழைப்பர்?
பதிகம் என்று அழைக்கப்படும்.
8. திருமுறைகள் எத்துனை?
பன்னிரெண்டு (12)
9. கிருஸ்ணபட்சம் என்றால் என்ன?
பௌர்ணமி தொடக்கம் அமாவாசை வரையுள்ள காலம்
10. ஆதிசங்கரர் பாடிய பாடல்களை எப்படி அழைப்பர்?
‘சிவானந்தலகரி’
11. சேத்திர பாலகர் என்பது யாரைக் குறிக்கும்?
பைரவரைக் குறிக்கும்
12. கூத்தப் பெருமான் என்பவர் யார்?
நடராஜப் பெருமான்
13. டென்மார்க் பிரண்டா நகரில் உள்ள ஆலயம் எது?
அபிராமி அம்மன் ஆலயம்
14. டென்மாரக்கில் நாகபூஷணி அம்மன் ஆலயம் எங்கே உள்ளது?
‘வொயின்ஸ்’ நகரத்தில்
15. திருப்புகழ் இயற்றியவர் யார்?
அருணகிரிநாதர் சுவாதிகள்
உயர்தரம்:
1 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரங்கள்
எத்தனையாம் திருமுறைகளில் உள்ளன?
1ம் 2ம் 3ம் திருமுறைகள்
2. விநாயகருக்குரிய சிறப்பான நாள் எது
சதுர்த்தி
3. பிட்டுக்கு மண்சுமந்த பெருமான் யார்?
சிவபெருமான்
4. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் யாது?
புனிதவதியார்
5. சுந்தரமூர்த்தி நாயனார் எத்தனை வயதில் இறைவனை அடைந்தார்
புதினெட்டு வயதில்
6. சிறுத்தொண்டர் எவ்வாறு சிறப்புப் பெற்றார்?
தனது பிள்ளையைக் கறியாகச் சமைத்து சிவனடியாருக்குக் கொடுத்தார்.
7. தமிழ் மூதாட்டி எனப்படுபவர் யார்
அவ்வைப் பிராட்டியார்
8. மதுரையில் உள்ள சிறபபு வாய்ந்த ஆலயம் எது?’
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
9. சுக்கில பட்சம் என்பது எந்தக் காலத்தைக் குறிக்கும்
அமாவாசை முதல் பௌர்ணமி வரையான காலம்
11. ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யும் நமஸ்காரம் எவை?
அட்டாங்க நமஸ்காரம் (ஆண்கள்) பஞ்சாங்க நமஸ்காரம் (பெண்கள்)
12. பேய் உருவம் வேண்டிப் பெற்ற பக்தை யார்?
காரைக்கால் அம்மையார்
13. கோவில்களில் எந்தச் சந்நிதியை முழுவதுமாக சுற்றிவரக் கூடாது?
சண்டிகேஸ்வரர் சந்நிதியை
14. இராவணன் வெட்டு எங்கே உள்ளது?
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய பகுதியில்
15. இலங்கை தென்பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயம்?
கதிர்காமம்