இலக்குமி
இலக்குமி அல்லது திருமகள் என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்க ப்படுகி றார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.
ஒருவருடைய வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்வது என்பது சுலபமான காரியம் அல்ல. ஏனெனில் லட்சுமி தேவி என்பது பணம், சொத்துக்கள், ரத்தினங்கள்
நகைகள் போன்றவற்றை
குறிப்பதாகும். இவைகள் எல்லோரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கி விடுவது இல்லை. இன்று உங்களுடைய பொருள், நாளை வேறு ஒருவர் உடையதாக மாறிவிடுகிறது. இன்று உங்கள் கையில் இருக்கும் பணம், நாளை கட்டாயம் வேறு ஒருவர் கையில் தான் இருக்கும். ஆக பணம் என்பது நிலையானது அல்ல. அதே போல் தான் லட்சுமி தேவி நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பதில்லை.
லக்ஷ்மி தேவிக்கு பிடித்த சில விஷயங்களை நாம் செய்யும் பொழுது, நம்முடனேயே நிரந்தரமாக தங்கி விடுவதும் உண்டு. இதற்கு பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். நல்ல கர்மாக்கள் அதிகமாக இருக்கும் எல்லோரிடமும் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்கிறாள் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் இன்று கெட்டதை ஒரு பணக்காரன் செய்து கொண்டிருந்தாலும், அவனுக்கு மென்மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.