Pannisai Leave a Comment / Uncategorized / By admin 2024 ம் ஆண்டுக்கான போட்டிக்கு நீங்கள் விரும்பிய தேவாரத்தைத் தெரிவு செய்யலாம். தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன் பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகலமின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரைமண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டுபுண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் கைப்போது மலர்தூவிக்காதலித்து வானோர்கள்முப்போதும் முடிசாய்த்துத்தொழநின்ற முதல்வனைஅப்போது மலர்தூவிஐம்புலனும் அகத்தடக்கிஎப்போதும் இனியானைஎன்மனத்தே வைத்தேனே. தாயினும் நல்ல தலைவரென்று அடியார்தம்மடி போற்றிசைப்பார்கள்வாயினும் மனத்தும் மருவி நின்று அகலாமாண்பினர் காண்பலவேடர்நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கிநுழைதரு நூலினர் ஞாலம்கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்தகோணமா மலையமர்ந்தாரே புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்திஅலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே. நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானைஉறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்கறும்பழி பாவ மவல மிலரே . மாதர்ப் பிறைக்கண்ணி யானைமலையான் மகளொடும் பாடிப்போதொடு நீர்சுமந் தேத்திப்புகுவா ரவர்பின் புகுவேன்யாதுஞ் சுவடு படாமல்ஐயா றடைகின்ற போதுகாதன் மடப்பிடி யோடுங்களிறு வருவன கண்டேன். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழமண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறுதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறுசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்செங்கய லார்புனற் செல்வமல்குசீர் கொள்செங் காட்டங் குடியதனுள்கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்கணபதி யீச்சரங் காமுறவே. “நத்தார்படை ஞானன்பசு வேறின்நனை கவிழ்வாய்மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்பத்தாகிய தொண்டர்தொழும் பாலாவியின் கரைமேல்செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே“ இடரினும் தளரினும் எனதுறுநோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. என்ன புண்ணியஞ் செய்தனைநெஞ்சமே யிருங்கடல் வையத்துமுன்னம் நீபுரி நல்வினைப்பயனிடை முழுமணித் தரளங்கள்மன்னு காவிரி சூழ்திருவலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி யாதரித் தேத்தியும்பாடியும் வழிபடும் அதனாலே பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறைஇறையணி வளையிணை முலையவ ளிணைவன தெழிலுடை யிடவகைகறையணி பொழில்நிறை வயலணி கழுமலம் அமர்கன லுருவினன்நறையணி மலர்நறு விரைபுல்கு நலமலி கழல்தொழன் மருவுமே. பரவும் பரிசொன் றறியேன்நான்பண்டே உம்மைப் பயிலாதேன்இரவும் பகலும் நினைந்தாலும்எய்த நினைய மாட்டேன்நான்கரவில் அருவி கமுகுண்ணத்தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலைஅரவந் திரைக்கா விரிக்கோட்டத்தையா றுடைய அடிகளோ! கூற்றாயின வாறுவி லக்ககிலீர்கொடுமைபல செய்தன நானறியேன்ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டா னத்துறை அம்மானே. தம்மையே புகழ்ந் திச்சைபேசினுஞ்சார்வினுந் தொண்டர் தருகிலாப்பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தைபுகலூர் பாடுமின் புலவீர்காள்இம்மையே தருஞ் சோறுங் கூறையும்ஏத்தலாமிடர் கெடலுமாம்அம்மையே சிவலோக மாள்வதற்கியாதுமையுற வில்லையே. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே. மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்பிறரை வேண்டாதேமூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே.