உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்
திருப்புகழ்
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.