Devaram
பஞ்சபுராணங்கள் தேவாரம் பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரைஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லதுநாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே! திருவாசகம் பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடையஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாயதேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானேயானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே! திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வேதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே …