மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட் செய்மின் குழாம் புகுந்து அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே!
குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின் மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே!
புராணம்
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும்ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்!
திருப்புகழ் ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்!