எம்மைப்பற்றி

 

 
‘எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணியிரங்கவுந் நின்தெய்வ
அருட்கருணை செய்வாய் பராபரமே.’
அன்புசால் டென்மார்க்வாழ் தமிழ்மக்களே!
புலம்பெயர் நாட்டில் இன்று நாம்வாழும் இயந்திரவாழ்க்கையில் எமது அடுத்த தலைமுறையினருக்குத் தேவையான வாழ்க்கைநெறிகளையும் அதன் தத்துவங் களையும் தெளிவுபடுத்தவேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம்
இந்தக் காலகட்டத்தில் எடுத்துக்கூற முற்படாவிட்டால்; எமது அடுத்த தலைமுறையானது எதுவித வாழ்க்கை நெறிக்குள்ளேயும் தன்னை இணைத்துக் கொள்ளாது ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்று மனம்போன போக்கில் நெறியற்ற ஒரு வாழ்வை தனது வாழ்க்கை முறையாக்கிக்கொள்ள வழிவகுத்துவிடும். எனவே அவர்களை அவ்வழியில் செல்லவிடாது எம்மாலான அனைத்து வாழ்வு நெறிகளையும்; அவர்களுக்குப் புகட்டவேண்டிய மாபெரும் பணி எம்முன் காத்துக் கிடக்கின்றது.
ஆம் சைவ சமயதத்துவங்களையும் அதனுள் பொதிந்து கிடக்கும் உண்மைகளையும் விளக்கிக்கூறி சீவகாருண்யத்துடன்; கூடிய உண்மையான நெறிமுறைகளை அவர்களுக்கு தெரிய வைப்பதன் மூலமாகத்தான் எமது பாரம்பரிய வாழ்க்கை நெறிமுறையுடன் அவர்களையும் வாழவைக்க முடியுமென்பது எமது கருத்து. சைவசமயத்தில் கூறப்பட்ட சடங்கு முறைகளையும் வழிபாடுகளையும் நாங்கள் கடைப்பிடித்து வருகின்றோமே தவிர அதன் தார்ப்பரியங்களும் அதுபற்றிய கருத்துக்களும் எம்மவரில் பலருக்கு தெரிவதில்லை. இப்படியான பல குறைகளைத் தீர்த்து வைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவை என்ற எமது அமைப்பாகும்.
மேற் குறிப்பிட்ட விடயங்கள் மட்டுமன்றி காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு வேறும்பல நல்ல விடயங்களையும் படிப்படியாக செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த அமைப்பானது சுயநலமற்ற அமைப்பாக மட்டுமன்றி எதுவித பொருளாதார நோக்கமோஇ அரசியல் நோக்கமோஇ அல்லது மதவாதமோஇ இல்லாத சீவநேய ஒருமைபபாட்டுடன் கூடிய பாகுபாடற்ற பண்பட்ட ஒரு அமைப்பாகச் செயற்பட திடசங்கற்பம் கொண்டு உங்களை நாடி வந்திருக் கின்றது. நீங்களும் இன்றே எம்முடன் இணைந்துகொண்டு எமது செயற்திட்டத்தை விரைவுபடுத்த உதவிக்கரம் கொடுக்குமாறு இந்த இணையத்தின் வாயிலாக அன்புடன்வேண்டிக் கொள்ளுகின்றோம்.
 
நிர்வாகத்தினர்
சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவை, டென்மார்க்