Poovodu..,
பூவொடு நீர்சுமந்து ஏத்தி! அன்பு செலுத்துவதற்கு ஒர் உருவம் அவசியம் என்பதைக் கண்டு காட்டியவர் காரைக்கால் அம்மையார் ஆவார். சங்கமருவிய காலத்துடன் தோற்றம் பெற்ற இந்துசமயச் சுருவவழிபாட்டு இறைவணக்கத்தில் ஆண்டவனை வழிபடுவதற்குப் பூவும், நீருமே மூலாதாரம் என்று காரைக்கால் அம்மையார் தனது பாடல்களில் குறிப்பிட்டதை அதன்பின்வந்த சமயகுரவர்களும் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்) கடைப்பிடித்தார்கள் என்பதை அவர்களிது பாடல்களில் இருந்தே நாம் பார்க்கலாம். ஒருவனுக்குப் புண்ணியம் என்பது பலவழிகளில் வந்து சேரும். போதொடு நீர் சுமந்தேத்தி …